தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

இரண்டாவது திருமணமா? மீனா பரபரப்பு

சென்னை: நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் 2022ல் நுரையீரல் பாதிப்பு காரணமாக இறந்தார். தனது மகளுடன் மீனா வசித்து வருகிறார். இந்நிலையில் கணவரது மறைவுக்கு பிறகு இரண்டாவது திருமணம் செய்வதாக வந்த செய்திகளால் தனது மனம் புண்பட்டதாக மீனா வருத்தத்துடன் கூறியுள்ளார்.

நடிகர் ஜகபதி பாபு தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் சமீபத்தில் பங்கேற்ற மீனா, இந்த அடிப்படையற்ற வதந்திகளால் ஏற்பட்ட துயரத்தைப் பற்றி மனம் திறந்து பேசினார். தனது கணவர் இறந்த உடனேயே, மற்ற நடிகர்களுடன் தன்னை இணைத்துக் கூறும் சரிபார்க்கப்படாத செய்திகள் தன்னையும் தனது குடும்பத்தினரையும் மிகவும் பாதித்ததாக அவர் தெரிவித்தார்.

‘‘இந்த வதந்தி பரப்புபவர்களுக்கு இதயமோ அல்லது குடும்பமோ இல்லை என்று நான் உணர்ந்தேன். அவர்கள் தொடர்ந்து, தனது மனைவியை விவாகரத்து செய்த எந்த நடிகருடனும் என்னை இணைக்க முயன்றனர். அது ஒரு வேதனையான அனுபவம்’’ என மீனா பேசியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மீனா இதுபோல் பேசியது வைரலாகி வருகிறது.