செல்வராகவன் ஜோடியானார் குஷி ரவி
சென்னை: வியோம் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில், விஜயா சதீஷ் வழங்கும், இயக்குநர் டெனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவு பெற்றுள்ளது. சேலம் நகரில் பூஜையுடன் துவங்கி திட்டமிட்ட காலக்கட்டத்திலேயே நிறைவு பெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு, கதையின் உணர்வூட்டும் சூழலை வலுப்படுத்தும் வகையில் சேலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விரிவாக...
சென்னை: வியோம் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில், விஜயா சதீஷ் வழங்கும், இயக்குநர் டெனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவு பெற்றுள்ளது. சேலம் நகரில் பூஜையுடன் துவங்கி திட்டமிட்ட காலக்கட்டத்திலேயே நிறைவு பெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு, கதையின் உணர்வூட்டும் சூழலை வலுப்படுத்தும் வகையில் சேலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விரிவாக நடைபெற்றது. இயக்குநர்-நடிகர் செல்வராகவன் கதாநாயகனாகவும், பிரபல நடிகை குஷி ரவி ஜோடியாக இணைந்துள்ளனர். திறமையான நடிகர் அணியில் ஒய்.ஜி.மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், தீபக், ஹேமா, லிர்திகா, என்.ஜோதிகண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.