செல்வராகவன் அக்கா வேடத்தில் கவுசல்யா
திரைக்கு வந்த ‘ட்ரிப்’, ‘தூக்குதுரை’ ஆகிய படங்களை தொடர்ந்து டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. விஜயா சதீஷ் தயாரிக்கிறார். முதன்மை வேடத்தில் செல்வராகவன், அவரது ஜோடியாக குஷி ரவி நடிக்கின்றனர். செல்வராகவன் அக்கா கேரக்டரில் முன்னாள் ஹீரோயின் கவுசல்யா நடிக்கிறார். மற்றும் ஒய்.ஜி.மகேந்திரன், மைம் கோபி, சதீஷ், சேலம் தீபக், ஹேமா, லிர்த்திகா, என்.ஜோதி கண்ணன் நடிக்கின்றனர்.
கே.ரவிவர்மா ஒளிப்பதிவு செய்ய, ஏ.கே.பிரியன் இசை அமைக்கிறார். எஸ்.தீபக் எடிட்டிங் செய்ய, பாக்யராஜ் அரங்கம் அமைக்கிறார். ‘மான்ஸ்டர்’ முகேஷ் சண்டைப் பயிற்சி அளிக்கிறார். சேலத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்த கவுசல்யா, புதுப்பட வாய்ப்புகள் குறைந்ததும் டி.வி தொடர்களில் நடித்தார். தற்போது குணச்சித்திர கேரக்டரில் நடித்து வருகிறார்.