ஷேன் நிகாமிடம் நடிக்க கற்றுக்கொண்டேன்: சாந்தனு
சென்னை: எஸ்டிகே பிரேம்ஸ், பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் புரொடக்ஷன்ஸ் சார்பில் சந்தோஷ் டி.குருவில்லா, பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் தயாரித்துள்ள பான் இந்தியா படம், ‘பல்டி’. அலெக்ஸ் ஜே.புலிக்கல் ஒளிப்பதிவு செய்ய, சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார். உன்னி சிவலிங்கம் எழுதி இயக்கியுள்ளார். தமிழ் பதிப்புக்கான பணியை ஆர்.பி.பாலா ஏற்றுள்ளார். ஷேன் நிகாம், சாந்தனு, பிரீத்தி அஸ்ரானி, சோடா பாபு கேரக்டரில் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், பொற்தாமரை பைரவன் வேடத்தில் இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ளனர்.
வரும் 26ம் தேதி படம் திரைக்கு வருகிறது. படம் குறித்து சாந்தனு கூறுகையில், ‘சாந்தனு பாக்யராஜ் என்று அறியப்பட்டு வந்த நான், இப்போது சாந்தனு என்று சொல்லும் அளவுக்கு திரைத்துறையில் வளர்ந்திருக்கிறேன். 16 ஆண்டுகளுக்கு பிறகு நான் நடித்த மலையாள படம், ‘பல்டி’. இதில் நடித்தது புது அனுபவமாகவும், மீண்டும் மலையாளத்தில் களமிறங்க சிறந்த கேரக்டராகவும் அமைந்துள்ளது. படப்பிடிப்பில் ஷேன் நிகாமிடம் இருந்து நடிப்பு சம்பந்தமாக நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்’ என்றார்.