சாந்தாராம் பயோபிக்கில் தமன்னா
மும்பை: பாலிவுட்டின் ஜாம்பவான் இயக்குனர் வி.சாந்தாராம் பயோபிக், சித்ராபதி வி.சாந்தாராம் என்ற பெயரில் படமாகிறது. இதில் சித்தாந்த் சதுர்வேதி, சாந்தாராமாக நடிக்கிறார். அவரது மனைவி சந்தியா வேடத்தில் நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். சந்தியா, நடிகையாக இருந்தார். சாந்தாராம் இயக்கிய பல படங்களில் நடித்தும் இருக்கிறார். இந்த படத்தை அபிஜீத் தேஷ்பாண்டே இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிவிட்டது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
