இணையத்தை கலக்கும் சிவராஜ்குமார் - உபேந்திரா பாடல்
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களான சிவராஜ்குமார் மற்றும் உபேந்திரா இணைந்து நடிக்கும் படம் ‘45’. இப்படத்தில் தற்போதைய கன்னட சினிமாவின் சென்சேஷ்னல் நடிகரும் இயக்குனருமான ராஜ் பி.ஷெட்டி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை சுரஜ் புரடக்சன்ஸ் தயாரிக்கிறது.
முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் வீடியோக்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆஃப்ரோ தபாங்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் கானா காதர் எழுதி பாடியுள்ளார். ஜானி நடனம் அமைக்க, ஆப்பிரிக்க நடனக் கலைஞர்கள் இப்பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர்.
இப்பாடல் தமிழில் ஒரே நாளில் 7 லட்சம் பார்வைகளுக்கு மேல் பெற்றுள்ளது. மேலும், கன்னடத்தில் 40 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. யூடியூபில் வெளியாகியுள்ள இப்பாடலில் சிவராஜ்குமார் மற்றும் உபேந்திரா தங்களது ஐகானிக் ஸ்டெப்புகளை ஆடியுள்ளனர். மேலும், ராஜ் பி.ஷெட்டி கர்நாடகாவின் பாரம்பரிய நடனமான புலி நடனத்தை ஆடியுள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வருகிறது.
