ரோஜா மல்லி கனகாம்பரம் படப்பிடிப்பு முடிந்தது
சென்னை: யுனைடெட் ஆர்ட்ஸ் சார்பில் எஸ்.கே.செல்வகுமார் தயாரித்துள்ள படம், ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’. இதன் படப்பிடிப்பு முடிந்தது. இதில் 3 வெவ்வேறு கதைகள் இடம்பெறுகின்றன. ‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்பக் காணோம்’ ஆகிய படங்களை இயக்கியிருந்த கே.பி.ஜெகன், தற்போது இப்படத்தை எழுதி இயக்கி, மூன்று கதைகளில் ஒரு கதையின் ஹீரோவாக நடித்துள்ளார்.
முக்கிய வேடங்களில் எம்.எஸ்.பாஸ்கர், விஜய் வர்மா, சங்கீதா கல்யாண், அருள்தாஸ், கதிரவன் பாலு, அம்மு சாய், மோனிகா சந்தோஷ், மூர்த்தி, தியா, ரஞ்சித் வேலாயுதன், வெற்றிவேல் ராஜா, திண்டுக்கல் அலெக்ஸ், சங்கர், தனுஷ்கா, கே.பி.ஜெகன் மகன் சபரிஷ் நடித்துள்ளனர். ஏஆர்எஸ் கார்டனில் அமைக்கப்பட்ட கிளை சிறைச்சாலையில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. சுகசெல்வம் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். கார்த்திக் நேத்தா, திரைவண்ணன், சக்தி பாடல்கள் எழுதியுள்ளனர். மணிகண்டன் சிவகுமார் எடிட்டிங் செய்ய, வீரசமர் அரங்குகள் அமைத்துள்ளார்.
