படப்பிடிப்பில் அசந்து தூங்கிய கிரித்தி ஷெட்டி
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கிரித்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்தராஜ், கருணாகரன், ஜி.எம்.சுந்தர், ரமேஷ் திலக் நடித்துள்ள படம், ‘வா வாத்தியார்’. நாளை மறுதினம் திரைக்கு வருகிறது. ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இதில் நடித்தது குறித்து கிரித்தி ஷெட்டி கூறுகையில், ‘இது எனக்கு நேரடி தமிழ் படம் என்பதால், தமிழில் பேச முயற்சிக்கிறேன். நான் கார்த்தியின் ரசிகை. இப்போது அவருடன் ஜோடியாக நடித்ததன் மூலமாக, தமிழ் மக்கள் முன்னிலையில் அறிமுகமாவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
இப்படத்தில் நடிக்கும்போது டபுள் ஷிஃப்ட்டில் பணியாற்றினேன். இதனால், ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னையறியாமல் தூங்கிவிட்டேன். ஆனால், படப்பிடிப்பில் என் தூக்கம் கலைந்துவிடாமல் இருப்பதற்காக, சத்தம் போடாமல் சிலர் லைட்டிங் செய்தனர். நலன் குமாரசாமி, சத்யராஜ், கார்த்தி ஆகியோருடன் பணியாற்றியபோது, புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது. நான் சத்யராஜின் தீவிர ரசிகை. ஆனால், அவருடன் எனக்கு காம்பினேஷன் காட்சிகள் கிடையாது. அதை நினைத்து வருத்தமாக இருக்கிறது. தமிழ் ரசிகர்கள் எனக்கு கொடுக்கும் அன்பையும், ஆதரவையும் நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து வித்தியாசமான கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பேன்’ என்றார்.
