தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

படப்பிடிப்பில் படகு கவிழ்ந்து விபத்து: ரூ.1 கோடி கேமரா சேதம்

சென்னை: நகைச்சுவை நடிகர் சூரி ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் நடித்த ‘விடுதலை 1’, ‘விடுதலை 2’, ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ ஆகிய படங்கள் திரைக்கு வந்து வெற்றிபெற்றன. தற்போது ‘மண்டாடி’ என்ற படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ராமநாதபுரம் கடற்கரை பகுதியில் நடந்து வருகிறது. நேற்று தொண்டி பகுதியிலுள்ள நடுக்கடலில் படப்பிடிப்பு நடந்தபோது, திடீரென்று ஒரு படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. கடலில் மூழ்கிய 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். படகில் இருந்த கேமரா மற்றும் சில படப்பிடிப்பு சாதனங்கள் கடலில் மூழ்கியது.

இதன் மதிப்பு ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது. துரதிர்ஷ்டவசமான இச்சம்பவத்தில் சூரி உள்பட எந்த நடிகருக்கும், தொழிலாளருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் எல்ரெட் குமார் தயாரிக்கும் இதில் சத்யராஜ், மகிமா நம்பியார், சுஹாஸ் நடிக்கின்றனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார்.