ஷூட்டிங்கில் ஜூனியர் என்டிஆர் காயம்
ஐதராபாத்: ஜூனியர் என்.டி.ஆர், படப்பிடிப்பின் போது விபத்துக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜூனிய என்.டி.ஆர். தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “விளம்பர படப்பிடிப்பின் போது ஜுனியர் என்.டி.ஆருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவ ஆலோசனையின் பேரில், அவர் முழுமையாக குணமடைய இரண்டு வாரங்களுக்கு ஓய்வெடுக்கவுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது, யாரும் கவலைப்பட வேண்டாம். மற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.