குழந்தையை தத்தெடுப்பதாக ஸ்ருதிஹாசன் அறிவிப்பு
சென்னை: திருமணமே செய்யாமல் இருக்க முடிவு செய்தது குறித்து ஸ்ருதிஹாசன் அளித்துள்ள பேட்டி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் கூறுகையில், ‘திருமணம் என்ற எண்ணத்தால் மிகவும் பயந்துள்ளேன். எனது அடையாளத்தை ஒரு சிறிய காகிதத்துடன் இணைக்கக்கூடாது என்று நினைக்கிறேன். திருமணம் சொல்லும் கொள்கைகளை நான் மதிக்கிறேன். ஆனால், அவற்றை சட்ட ஆவணமாக்கும்போது, அது எனக்கு வேண்டாம் என்று நினைக்கிறேன்.
ஒருகாலத்தில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த நான், அந்த உறவின் இணக்கமின்மை காரணமாக காதல் முறிந்தது. திருமணம் என்பது இரண்டு நபர்களை மட்டும் பற்றியது அல்ல. அது குழந்தைகள், எதிர்கால வாழ்நாள் பொறுப்பை பற்றியது. நான் எப்போதும் நான் ஒரு தாயாக இருக்க விரும்புகிறேன். ஆனால், பிறக்கும் குழந்தையை ஒற்றைப் பெற்றோராக வளர்ப்பதற்கு விரும்பவில்லை. எதிர்காலத்தில் குழந்தையை தத்தெடுப்பது எனது விருப்பமாக இருக்கலாம்’ என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.