தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஸ்ருதிஹாசனின் பிளாஸ்டிக் சர்ஜரி பிரச்னை

சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது சொந்த வாழ்க்கை, சினிமா மற்றும் சோஷியல் மீடியா ட்ரோல்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் ஸ்ருதிஹாசன். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘திரையுலகில் 65 வருடங்களாக இருக்கும் என் தந்தை கமல்ஹாசன் வெற்றி, தோல்வி உள்பட பல விஷயங்களை பார்த்துவிட்டார். ‘தக் லைஃப்’ படத்தின் ரிசல்ட் அவரை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. அவர்...

சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது சொந்த வாழ்க்கை, சினிமா மற்றும் சோஷியல் மீடியா ட்ரோல்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் ஸ்ருதிஹாசன். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘திரையுலகில் 65 வருடங்களாக இருக்கும் என் தந்தை கமல்ஹாசன் வெற்றி, தோல்வி உள்பட பல விஷயங்களை பார்த்துவிட்டார். ‘தக் லைஃப்’ படத்தின் ரிசல்ட் அவரை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. அவர் நடித்து அல்லது தயாரித்து சம்பாதிக்கும் பணத்தை சினிமாவில் மட்டுமே முதலீடு செய்கிறார். கார் வாங்கவும், வீடு கட்டவும் அவர் ஆசைப்படுவது இல்லை. இதுபோன்ற நம்பர் கேம் என் தந்தையை ஒருபோதும் பாதிக்காது.

நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டது தொடர்பாக சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்கின்றனர். என் தோற்றம் முழுவதுமே பிளாஸ்டிக் சர்ஜரிதான் என்றும் விமர்சிக்கின்றனர். ஆனால், நான் என்ன செய்திருக்கிறேன்? எவ்வளவு செய்திருக்கிறேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். மற்ற நடிகைகள் எவ்வளவு செய்துள்ளார்கள் என்பதும் எனக்கு தெரியும். மற்றவர்களின் விமர்சனங்களை என் தலையில் ஏற்றிக்கொள்ள மாட்டேன். இது என் தனிப்பட்ட விருப்பம்’ என்று நெத்தியடியாக பேசியுள்ளார்.