தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

மீண்டும் படம் இயக்கும் சில்வா

 

பல்வேறு மொழிப் படங்களுக்கு அதிரடி சண்டைக் காட்சிகள் அமைத்து முன்னணியில் இருப்பவர், ஸ்டண்ட் சில்வா. நிறைய படங்களில் நடித்துள்ள அவர், 2021 டிசம்பரில் ஜீ5ல் வெளியான ‘சித்திரைச் செவ்வானம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனரானார். இதில் சமுத்திரக்கனி, சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் நடித்திருந்தனர். சண்டைக் காட்சிகளில் தனி பாணியை பின்பற்றும் ஸ்டண்ட் சில்வா, முன்னணி இயக்குனர்கள் மற்றும் ஹீரோக்கள் தேடி ஒப்பந்தம் செய்யும் அந்தஸ்தில் இருந்து வருகிறார். அவரது சிறப்பான திரைப்பணிகளை பாராட்டி தமிழ்நாடு அரசு விருது உள்பட பல்வேறு அமைப்புகளின் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வரிசையில் ஸ்டண்ட் சில்வா மனோரமா கேரள மாநிலம் சார்பில் வழங்கப்பட்ட, இந்த ஆண்டின் சிறந்த ஸ்டண்ட் இயக்குனருக்கான விருதை வென்றுள்ளார். மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கி நடித்த ‘எல் 2: எம்புரான்’, மோகன்லால் நடித்து வெற்றி பெற்ற ‘துடரும்’ ஆகிய படங்களுக்காக, இந்த ஆண்டின் சிறந்த ஸ்டண்ட் இயக்குனருக்கான விருதை ஸ்டண்ட் சில்வாவுக்கு கேரள மாநில அரசு வழங்கி கவுரவித்துள்ளது. இந்நிலையில், அடுத்து இயக்கும் படம் குறித்து அவர் கூறுகையில், ‘தற்போது சண்டைக் காட்சிகள் அமைப்பதில் பிசியாக இருக்கிறேன். எனவே, எனது அடுத்த படத்தின் இயக்கம் குறித்து விரைவில் அறிவிப்பேன்’ என்றார்.