தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

பாடகர் மகனை மிரட்டிய வில்லன்

நெய்வேலியை சேர்ந்த ஆர்.கே.வரதராஜ் தனது சிறுவயதிலேயே மேடை நாடகங்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போல் பேசி நடித்து வந்தார். அவரை நண்பர்கள் உற்சாகப்படுத்தி கோடம்பாக்கத்துக்கு அனுப்பி வைத்தனர். சில படங்களில் நடித்தார். விரைவில் திரைக்கு வரும் ‘வட்டக்கானல்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

எம்.பி.ஆர் பிலிம்ஸ், ஸ்கைலைன் சினிமாஸ் இணைந்து தயாரிக்க, பித்தாக் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பாடகர் மனோவின் மகன் துருவன் மனோ, ஆர்.கே.சுரேஷ், பாடகர் மனோ நடித்துள்ளனர். மிகவும் மிரட்டலான வில்லனாக ஆர்.கே.வரதராஜ் நடித்துள்ளார். மேலும் சில படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.