தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

‘பிதாமகன்’ பாணியில் சிவகார்த்திகேயன்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மதராஸி’. முன்னதாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சிக்கந்தர்’ படத்தின் தோல்விக்குப் பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்த படமாக இப்படம் அமைந்துள்ளது. இப்படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் பின்னணி இசை மற்றும் ஸ்டன்ட் இயக்குனர் கெவின் தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ‘மதராஸி’...

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மதராஸி’. முன்னதாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சிக்கந்தர்’ படத்தின் தோல்விக்குப் பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்த படமாக இப்படம் அமைந்துள்ளது. இப்படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் பின்னணி இசை மற்றும் ஸ்டன்ட் இயக்குனர் கெவின் தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ‘மதராஸி’ படத்தின் சண்டை காட்சிகள் அனைத்தும் உலகத்தரம் வாய்ந்தவையாக உருவாக்கப்பட்டது.

இப்படத்தில் பணிபுரிந்த கெவின் சண்டை இயக்குனர் ஸ்டன்ட் சிவாவின் மூத்த மகன் ஆவார். படம்குறித்து கெவின் பேசியதாவது, ”இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த முருகதாஸ் சாருக்கு எனது முதல் நன்றி. அவருடைய திரைக்கதையில் ஆக் ஷன் எப்போதுமே கலந்திருக்கும். ‘ஜெயிலர்’ படத்துல நானும் அப்பாவும் இணைந்துதான் ஸ்டன்ட் வேலைகள் செய்தோம். அதில் என்னுடைய வேலைகளைப் பார்த்துவிட்டு முருகதாஸ் என்னை இந்தப் படத்துக்கு அழைத்தார். முதலில் நாங்கள் டோல்கேட் சண்டை காட்சியை தான் படமாக்கினோம். அந்தக் காட்சி எடுத்து முடித்து அதை எடிட் பண்ணி சார்கிட்ட காண்பித்ததும் அவர் ரொம்பவே சந்தோஷப்பட்டார்.

அதை பார்த்த பிறகு ‘சிக்கந்தர்’ படத்தின் சண்டை காட்சியையும் என்னை கவனிக்க சொன்னார். அது என் வாழ்க்கையையே மாற்றியது. எஸ்.கே, வித்யூத் ஜம்வால் இருவரையும் சோர்வடைய வைப்பதே எனது நோக்கம். அந்தளவு ஆக் ஷன் காட்சிகள் ஃபிரெஷ்ஷாக இருந்தது. என் அப்பா ‘பிதாமகன்’ படத்துல விக்ரம் சார் கேரக்டருக்கு சில விஷயங்கள் விலங்குகள்கிட்ட இருந்து எடுத்து வச்சிருப்பார். அதைத்தான் நானும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு முயற்சி செய்திருக்கிறேன்” என்றார்.