சிவகார்த்திகேயனின் மாஸ் லைன் அப்
‘அமரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகியுள்ள படம் ‘மதராஸி’. கடந்த 5ம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ‘சிக்கந்தர்’ படத்தின் படு தோல்விக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸுக்கு இப்படம் பெரியளவில் கை கொடுத்துள்ளது. அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இது சிவகார்த்திகேயனின் 25வது படமாகும். இதில் அவருடன் சேர்ந்து ரவி மோகன், அதர்வா முரளி, ராணா டகுபதி, லீலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படம் 2026ம் ஆண்டு ஜனவரியில் திரைக்கு வருகிறது.
அதற்கடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் 3 படங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ‘டான்’ என்ற படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படமும், புஷ்கர் காயத்திரி இயக்கத்தில் அடுத்த படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இப்படி அடுத்தடுத்து வெற்றி கூட்டணியில் இணைவதால் இந்த படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. மேலும், ‘குட் நைட்’ படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகரிடம் சிவகார்த்திகேயன் கதை கேட்டுள்ளார். அந்த படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது .