தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாகும் கல்யாணி

 

சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். இந்த தகவல் வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகளை வெங்கட் பிரபு விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறார். சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகும் இப்படம் ‘மாநாடு’ படத்தை போன்று டைம் டிராவல் தொடர்பான கதையம்சம் கொண்டது என சொல்லப்படுகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார்.

மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் சிவகார்த்திகேயன் விருப்பத்தின் படி மிருணாள் தாகூர் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் இப்போது மலையாளத்தில் ‘லோகா’ படம் வெற்றி பெற்றதால் கல்யாணி பிரியதர்ஷனை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. முன்னதாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ என்ற படத்திலும் சிவகார்த்திகேயன் ‘ஹீரோ’ என்ற படத்திலும் கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயனுடன் 2வது முறையாக இணைகிறார் கல்யாணி பிரியதர்ஷன்.