தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

டைம் டிராவல் கதையில் சிவகார்த்திகேயன்

சுதா ​கொங்​கரா இயக்​கத்​தில் சிவ​கார்த்​தி​கேயன் நடித்​துள்ள ‘பராசக்​தி’ என்ற படம், வரும் பொங்​கலுக்கு திரைக்கு வருகிறது. இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை வெங்​கட் பிரபு இயக்​கு​கிறார். இதில் சிவகார்த்திகேயன் மிகவும் வித்​தி​யாச​மான தோற்​றத்​தில் நடிக்கிறார். இதற்​காக வெங்கட் பிரபுவும், சிவகார்த்திகேயனும் அமெரிக்கா சென்றனர். அங்கு சிவகார்த்திகேயனுக்கு டீ-ஏஜிங் தோற்​றம் வடிவ​மைக்கப்படுகிறது. இதற்கு முன்பு வெங்​கட் பிரபு இயக்​கத்​தில் விஜய் நடித்த ‘தி கோட்’ படத்​தி​ல், விஜய்​யின் டீ-ஏஜிங் லுக்கை அமெரிக்​கா​வில் வடிவ​மைத்​தனர். அதே இடத்​தில் சிவ​கார்த்​தி​கேயனின் தோற்​றத்தை ஸ்கேன் செய்துள்​ளனர்.

இது சயின்ஸ் பிக்‌ஷன் மற்​றும் டைம் டிராவல் கதையை மையமாக கொண்டது. இதுகுறித்து இன்​ஸ்​டாகிராமில், சிவ​கார்த்​தி​கேயன் அமெரிக்​காவில் இருக்கும் ஸ்டுடியோவில் நிற்​கும் ஒரு போட்டோவை பதி​விட்​டுள்ள வெங்கட் பிரபு, ‘எதிர்காலம் இங்​கே’ என்ற கேப்ஷனை குறிப்பிட்டுள்​ளார். இதையடுத்து, இப்படம் டைம் டிராவல் கதையை மையப்படுத்தி உருவாக்கப்படுகிறது என்பதை வெங்கட் பிரபு உறுதி​ செய்துள்ளார். வரும் பொங்​கல் பண்டிகைக்​கு பிறகு படப்​பிடிப்பு தொடங்​குகிறது.