தமிழ் இயக்குனருடன் இணைந்தார் சிவராஜ்குமார்
சென்னை: கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் கேரக்டர் லுக்கை, அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‘இடி மின்னல் காதல்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் பாலாஜி மாதவன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் சிவராஜ்குமார் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் தமிழ் மற்றும் கன்னட திரையுலகின் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். புலனாய்வு ஆக்ஷன் திரில்லராக தயாராகும் இந்த திரைப்படத்தை த்திக் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சூரஜ் சர்மா - கிருஷ்ணகுமார். பி. சாகர் ஷா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.