ஆறாம் வேற்றுமை இயக்குனரின் அடுத்த படம்
சென்னை: இயக்குனர் ஹரி கிருஷ்ணன் செல்லமுத்து கூறியது: என் முதல் படம் ஆறாம் வேற்றுமை. யோகி பாபு மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இப்படம் திரைக்கு வந்த போது இயக்குனர் சேரன் மற்றும் அனைத்து தரப்பு ரசிகர்களும் பாராட்டினர். அந்த காலகட்டத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாத பல காரணங்கள் இருந்த பொழுதிலும் தற்பொழுது இத்திரைப்படம் இணையத்தில் வெளியாகி சமூக வலைதள செயலிகளினால் லட்சக்கணக்கான மக்களை சென்றடைந்துள்ளது.
நல்ல சிந்தனைகள் சிறப்பான நோக்கம் சமூக அக்கறை கொண்ட கதைகளை பி.வி.எம். பிலிம் மேக்கர்ஸ் பேட்டை வி. முருகன் கேட்டு வருவதாக அறிந்து அவரை சந்தித்து கதையை கூறினேன் இந்த கதையின் கரு தற்பொழுது சமூகத்திற்கு தேவையான ஒன்று இது மக்களிடம் விரைவில் சென்றடைய வேண்டும் எனக் கூறி தயாரிக்கிறார். இப்படத்தின் பெயர், நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைத்து தகவல்களும் விரைவில் அறிவிக்கப்படும்.