தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

‘சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை’

சென்னை: எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் வி.சேகர் பேசியது: இப்போது படம் எடுப்பது பாதி வேலை தான்,...

சென்னை: எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் வி.சேகர் பேசியது: இப்போது படம் எடுப்பது பாதி வேலை தான், அதை புரமோட் செய்வது தான் முக்கிய வேலையாக உள்ளது. அதைச் சரியாகச் செய்ய வேண்டும்.

நாங்கள் படம் எடுக்கும் போது எத்தனை பெரிய படமாக இருந்தாலும் 250 தியேட்டருக்கு மேல் தர மாட்டார்கள், ஆனால் இப்போது கேட்டை திறந்து விட்ட மாதிரி 1000 திரையரங்குகளில் பெரிய படம் மட்டும் தான் ரிலீஸாகிறது. அப்புறம் எப்படி சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைக்கும். இது மாற வேண்டும். படத்தை நல்ல தியேட்டர் பார்த்து ரிலீஸ் செய்யுங்கள் என்றார்.

பட நாயகன் நாகரத்தினம் பேசும்போது, ‘‘ஜாம்பவான்ங்கள் கோலோச்சிய இந்த கலைத்துறையில் நானும் பங்கேற்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது’’ என்றார். இலக்கியா நாயகியாக நடித்துள்ளார். நான் கடவுள் ராஜேந்திரன், செந்தில், செம்புலி ஜெகன், சுரேந்தர், முத்துக்காளை, காவிரி மகிமா, கணபதி நடித்துள்ளனர். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ கே ஆல்ட்ரின் இசையமைத்துள்ளார்.