தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

மீண்டும் கிளாமரில் இறங்கிய சோபிதா

இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் சோபிதா துலிபாலா. ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். கடந்த ஆண்டு நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். முன்னதாக நாகசைதன்யா, சமந்தாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்தார். நாகசைதன்யாவை திருமணம் செய்த...

இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் சோபிதா துலிபாலா. ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். கடந்த ஆண்டு நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். முன்னதாக நாகசைதன்யா, சமந்தாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்தார். நாகசைதன்யாவை திருமணம் செய்த பிறகும் சினிமாவில் பிசியாக நடித்து வரும் சோபிதா, அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கி வரும் ‘வேட்டுவம்’ படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சோபிதா கிளாமர் போட்டோஷூட் செய்து பதிவிட்டு வருகிறார். அது அவரின் பட வாய்ப்புக்கு உதவும் என்று நம்புகிறார். இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள சமீபத்திய போட்டோ வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் ‘திருமணத்திற்கு பிறகு இவ்வளவு கிளாமரில் இறங்கிவிட்டீர்களே” என கேட்டு வருகின்றனர்.