தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

சோஷியல் மீடியா என் சிந்தனையை பறித்துவிட்டது: ஐஸ்வர்யா லட்சுமி வேதனை

 

சென்னை: பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள், வெப்தொடர்கள் மற்றும் விளம்ரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி, திடீரென்று சோஷியல் மீடியாவில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து வேதனையுடன் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு: என்னை இந்த திரைத் துறையில் நிலைநிறுத்திக்கொள்ள சமூக வலைத்தளங்கள் மிகவும் அவசியம் என்று நினைத்து, அதில் நான் நீண்ட காலமாக சுறுசுறுப்பாக இயங்கி வந்தேன். நான் இருக்கும் திரைத்துறையின் தன்மையை கருத்தில் கொண்டு, காலத்துக்கு ஏற்ப மாறுவது மிகவும் அவசியம் என்று நினைத்தேன். ஆனால், சமூக ஊடகங்கள் என்னை தலைகீழாக மாற்றி இருக்கின்றன.

எனது அன்றாட பணிகளில் இருந்து என்னை வெற்றிகரமாக திசை திருப்பிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். எனக்குள் இருந்த சிந்தனையை சோஷியல் மீடியா அடியோடு பறித்துவிட்டது. என்னுடைய சொல்லகராதி மற்றும் மொழியை அது கடுமையாக பாதித்துள்ளது. ஒரு எளிய இன்பத்தைக்கூட அது மகிழ்ச்சியற்றதாக மாற்றி விட்டது. ஒரு பொதுவானவளாக, சூப்பர்நெட்டின் விருப்பங்களுக்கும், ஆசைகளுக்கும் ஏற்ப வாழ நான் விரும்பவில்லை. கலைக்காக மிகவும் சரியான ஒன்றை செய்ய விரும்புகிறேன். அதனால், இணைய உலகில் இருந்து விலகுகிறேன். இனி அர்த்தமுள்ள உறவுகளையும், படங்களையும் உருவாக்குவேன் என்று நம்புகிறேன். தொடர்ச்சியாக எனக்கு உங்களின் அன்பையும், ஆதரவையும் கொடுங்கள்.