நான் செய்த பெரிய தவறு சோனியா அகர்வால் கவலை
சென்னை: ‘கிஃப்ட்’ என்ற படத்தில் போலீசாக நடித்துள்ளார் சோனியா அகர்வால். இந்த மாதம் இறுதியில் இப்படம் வெளியாக இருக்கும் நிலையில், யூடியூப் சேனலுக்கு படம் குறித்து பல விஷயத்தை பேசி உள்ளார். அதில் தான் செய்த பெரும் தவறு குறித்து அவர் கூறியது: நான் வாழ்க்கையில் ஒரு தவறான முடிவு எடுத்துவிட்டேன், அதாவது நான் பீக்கில் இருந்த போது, ஒரு பிரேக் எடுத்துவிட்டேன்.
திருமணத்திற்கு பிறகு நான் நடிக்கவில்லை. அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு. புதுப்பேட்டை படத்தில் நடித்துக்கொண்டு இருந்த போது, பிரபாசுடன் தெலுங்கு படம் ஒன்றிலும், ஜூனியர் என்டிஆருடன் படம் ஒன்றிலும் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், திருமணத்துக்கு தயாராகிவிட்டதால் அந்த படங்களில் நடிக்கவில்லை. அந்த இரண்டு படமும் தெலுங்கில் பெரிய அளவில் வெற்றி பெற்றன என சோனியா அகர்வால் அந்த பேட்டியில் மனம் திறந்து பேசினார்.