தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

சூ ஃப்ரம் ஸோ பட்ஜெட் ரூ.5 வசூல் ரூ.103 கோடி: கலக்கும் மற்றொரு கன்னட சினிமா

சென்னை: கன்னட சினிமாவில் புதிய இயக்குநர்களின் நுழைவு பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ராஜ் பி ஷெட்டி தயாரிக்கும் அல்லது இயக்கும் அல்லது நடிக்கும் படங்கள் மினிமம் கேரண்டி வகையறாவுக்குள் அடங்கிவிடுகின்றன. அவரது படம் என்றாலே ரசிகர்களுக்கு ஓரளவு நம்பிக்கை இருக்கிறது. அந்த வகையில் ராஜ் பி ஷெட்டியின் லைட்டர் புத்தா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும்...

சென்னை: கன்னட சினிமாவில் புதிய இயக்குநர்களின் நுழைவு பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ராஜ் பி ஷெட்டி தயாரிக்கும் அல்லது இயக்கும் அல்லது நடிக்கும் படங்கள் மினிமம் கேரண்டி வகையறாவுக்குள் அடங்கிவிடுகின்றன. அவரது படம் என்றாலே ரசிகர்களுக்கு ஓரளவு நம்பிக்கை இருக்கிறது. அந்த வகையில் ராஜ் பி ஷெட்டியின் லைட்டர் புத்தா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் கன்னட படம் ‘சூ ஃப்ரம் ஸோ’.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஜே.பி. துமிநாட் இயக்கியுள்ளார். இதில் ராஜ் பி ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த ஜூலை 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்துக்கு பெரிய அளவில் எந்த விளம்பரமும் இல்லை. அதன் பிறகு படம் திரையரங்குகளில் ரிலீஸான பின் பாசிட்டிவ் விமர்சனங்களால் மக்கள் கூட்டம் தியேட்டரில் அலைமோதியது. இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.1.5 கோடி என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், ராஜ் பி.ஷெட்டி ரூ.5.5 கோடி என தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.103 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது. கர்நாடகத்திலுள்ள ஒரு சிறு கிராமத்தில் ஒரு வீட்டில் அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. அந்த குடும்பத்திற்கு உதவியாக அந்த ஊரே திரண்டு இதை எப்படி சமாளிக்கிறது என்பதை காமெடியுடன் இந்த படம் சொல்கிறது. புக் மை ஷோ தளத்தில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமாக டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

இந்தப் படத்தின் வரவேற்பை கருத்தில் கொண்டு இதன் மலையாள உரிமையை துல்கர் சல்மானின் வேஃபேரர் நிறுவனம் கைப்பற்றியது. அதன்படி கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி கேரளாவில் வெளியான இப்படம் அங்கும் பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது. தொடர்ந்து தெலுங்கில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிட்டது. அங்கும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழில் வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

வெறும் ரூ.5 கோடியில் உருவான படம் ரூ.103 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியிருப்பதன் மூலம் படத்தின் திரைக்கதை தான் ராஜா என்பது நிரூபணமாகியுள்ளது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை என்.எஸ்.ராஜ்குமார் வாங்கியுள்ளார். ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட கன்னட படங்கள் ஏற்கனவே சாதித்த நிலையில் ஒரு சிறு கன்னட படம் மேலும் புது சாதனை படைத்திருப்பதை இந்திய திரையுலகம் கவனிக்கத் தொடங்கியுள்ளது.