கிண்டல் பதிவுக்கு சூரி ‘சுளீர்’ பதில்
மதிமாறன் இயக்கும் `மண்டாடி’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கும் சூரி, சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்த தீபாவளி பண்டிகை வீடியோ வைரலானது. மதுரை ராஜாக்கூர் கிராமத்தில் உறவினர்களுடன் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய வீடியோவை பதிவிட்ட அவர், `எங்கள் ராஜாக்கூர் மண்ணின் மகிழ்ச்சியில் குடும்பத்துடன் தீபாவளி’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில், ஒரு ரசிகர் மட்டும் கிண்டலாக, `திண்ணையில கிடந்தவனுக்கு திடுக்குனு வந்துச்சாம் வாழ்க்கை’ என்று பதிவிட்டிருந்தார்.
இதை படித்தவுடன் சுளீரென்று பதிலளித்த சூரி, `திண்ணையில இல்ல நண்பா. பல நாட்களா ராத்திரியும், பகலும் நடுரோட்டில் இருந்தவன் நான். அந்த பாதைதான் எனக்கு வாழ்க்கையோட உண்மையையும், மதிப்பையும் கத்து கொடுத்தது. நீயும் உன் வளர்ச்சியில அதிக நம்பிக்கை வெச்சு முன்னேறினா, ஒருநாள் கண்டிப்பா வெற்றி உன்னை தேடி வரும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
