தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

சிறப்பு பாடலை விரும்பும் தமன்னா

இந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னாவின் சொத்து மதிப்பு, சுமார் ரூ.120 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பர ஒப்பந்தங்கள், சொகுசு வீடுகள், கார்கள் சேகரிப்பு, வெப்தொடர்கள், சோஷியல் மீடியா வருமானம் போன்றவை அவரது பணக்கார அந்தஸ்தை அதிகரித்துள்ளன. ‘அரண்மனை 4’ என்ற படத்துக்கு பிறகு தமிழில் தமன்னாவுக்கு புதிய வாய்ப்புகள் வரவில்லை. தெலுங்கில் ‘ஒடேலா 2’ என்ற படத்துக்கு பிறகு புதிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், தற்போது இந்தியில் ‘ரோமியோ’, ‘ரேஞ்சர்’, ‘விவன்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், ‘தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப் படங்களில் நான் நடித்தபோது, எந்த படமும் என்னை பரபரப்பாக பேச வைக்கவில்லை. ஆனால், அல்லு அர்ஜூன் நடித்த ‘பத்ரிநாத்’ என்ற படத்தில் நடித்த பிறகு எனது நடனத்தை பார்த்து பல இயக்குனர்கள், சிறப்பு பாடலுக்கு நடனமாட எனக்கு அழைப்பு விடுத்தனர். அப்படி தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி, இந்தியிலும் நடனமாடிய பாடல்கள்தான் என்னை மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்தி இருக்கின்றன. எனவே, தொடர்ந்து நான் சிறப்பு பாடல்களில் நடனமாட ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்’ என்றார்.