தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

மூன்று நாட்களில் ஸ்குவிட் கேம் 3 60 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை

மும்பை: தென் கொரிய வெப்சீரிஸான ‘ஸ்குவிட் கேம்’ சீசன் 3, ஓடிடியில் வெளியாகி வெறும் 3 நாட்களில் 60 மில்லியன் பார்வைகளை பெற்று சாதித்துள்ளது. இந்த வெப்தொடர் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காணக்கிடைக்கிறது. கடந்த ஜூன் 27ம் தேதி ரிலீசான நாள் முதல் ஓடிடியில் டாப்பில் உள்ளது. கடந்த ஆண்டு இதன் 2-வது சீசன் வெளியாகி 68...

மும்பை: தென் கொரிய வெப்சீரிஸான ‘ஸ்குவிட் கேம்’ சீசன் 3, ஓடிடியில் வெளியாகி வெறும் 3 நாட்களில் 60 மில்லியன் பார்வைகளை பெற்று சாதித்துள்ளது. இந்த வெப்தொடர் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காணக்கிடைக்கிறது. கடந்த ஜூன் 27ம் தேதி ரிலீசான நாள் முதல் ஓடிடியில் டாப்பில் உள்ளது. கடந்த ஆண்டு இதன் 2-வது சீசன் வெளியாகி 68 மில்லியன் வியூஸ்களை பெற்றது. இந்த தொடரை ஹாங் டாங் ஹ்யூங் இயக்கியுள்ளார். லீ ஜங் ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பணத்துக்காக எந்த எல்லைக்கும் செல்லும் இந்த மனித வாழ்க்கையின் உணர்வுகளை அழுத்தமான காட்சிகளால் திரைக்கதையாக்கியிருப்பது எல்லோருக்கும் கனெக்ட் ஆகிறது. அதுவே இந்த வெப்சீரிஸின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதை பதட்டம், பயத்துடன் இணைத்திருப்பது இன்னும் சிறப்பான யுக்தி. பணம் என்ற ஒற்றை காரணம் போதும், உங்களுக்கு பிடித்தமானவர்களை கூட பலிகொடுக்கலாம் என்ற மனித குரூரத்தையும், நம்பிக்கை, துரோகம், நட்பு என பல விஷயங்களை இந்த தொடர் அழுத்தமாக பேசியிருக்கிறது.