நடிகருடன் ஸ்ரீலீலா காதல் திருமணம்
தெலுங்கு படவுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ரீலீலாவுக்கு 23 வயதாகிறது. மருத்துவம் படித்து பட்டம் பெற்றுள்ளார். ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தில் அவரது கவர்ச்சி நடனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தற்போது கார்த்திக் ஆர்யன் ஜோடியாக நடிக்கும் இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் அவர், சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படத்தின் மூலம்...
அதனுடன் ‘Coming Soon’ என்ற வாசகத்தை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பலர், ‘ஸ்ரீலீலாவுக்கு நிச்சயதார்த்தமா அல்லது திருமணமா?’ என்று கேட்டு வருகின்றனர். அதோடு, யாரை அவர் திருமணம் செய்கிறார் என்றும், ஏன் இந்த திடீர் முடிவு என்றும் சிலர் கேட்டுள்ளனர். ஸ்ரீலீலாவுக்கு வரும் ஜூன் 14ம் தேதி பிறந்தநாள். நட்சத்திர திதிப்படி பிறந்தநாளை குடும்பத்தினர் கொண்டாடி இருக்கின்றனர். இது அந்த போட்டோக்களா என்று சில நெட்டிசன்கள் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர். தற்போது ‘ஆஷிக் 3’ என்ற இந்தி படத்தில் கார்த்திக் ஆர்யன் ஜோடியாக நடித்து வரும் ஸ்ரீலீலா, அவரை தீவிரமாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இதுவரை அவர்கள் இருவரும் வெளிப்படையாக பேசவில்லை.