வெளியில் தலைகாட்ட தயங்கும் ஸ்ரீகாந்த்
சமீபத்தில் ஸ்ரீகாந்த் நடித்த ‘சத்தமின்றி முத்தம் தா’, ‘மாய புத்தகம்’, ‘தினசரி’, ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’ உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு தரவில்லை. தற்போது மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், தேஜு அஷ்வினி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிளாக்மெயில்’ படத்தில் முக்கிய வேடத்தில் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். அவர் ஜோடியாக பிந்துமாதவி நடிக்கிறார்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா உள்ளிட்ட புரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டாலும், காந்த் மட்டும் கலந்து கொள்ளவில்லை. சமீபத்தில் போதை மருந்து பயன்படுத்திய குற்றத்துக்காக சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்தார் ஸ்ரீகாந்த். தற்போது குற்ற உணர்வு, தயக்கம் காரணமாக சினிமா நிகழ்ச்சி மற்றும் எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருக்கிறார்.
சினிமாவில் அறிமுகமாகி 23 ஆண்டுகளை கடந்துள்ள காந்த் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் செகண்ட் ஹீரோ அல்லது துணை நடிகர் வேடத்தில் நடித்து வருகிறார். இந்த நேரத்தில் போதை பிரச்னையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் காந்துக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர வேண்டும் என ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.