தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கவனம் பெரும் ஸ்ரீலீலாவின் டீசர்

கடந்த 2022ம் ஆண்டு வெளியான ‘தமாக்கா’ என்ற படத்தில் ரவி தேஜா ஜோடியாக நடித்திருந்தார் ஸ்ரீலீலா. இதில் வரும் ‘பல்சர் பைக்’, ‘ஜிந்தாக்’ போன்ற பாடல்கள் யூடியூபில் பல மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ரவி தேஜா ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ள படம் ‘மாஸ் ஜாதரா’. ரவி தேஜா முதன்மை வேடத்திலும்,...

கடந்த 2022ம் ஆண்டு வெளியான ‘தமாக்கா’ என்ற படத்தில் ரவி தேஜா ஜோடியாக நடித்திருந்தார் ஸ்ரீலீலா. இதில் வரும் ‘பல்சர் பைக்’, ‘ஜிந்தாக்’ போன்ற பாடல்கள் யூடியூபில் பல மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ரவி தேஜா ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ள படம் ‘மாஸ் ஜாதரா’. ரவி தேஜா முதன்மை வேடத்திலும், ராஜேந்திர பிரசாத் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தை பானு பொகவரபு இயக்கியுள்ளார். பீம்ஸ் செசிரோலியோ இசை அமைத்துள்ளார். நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா இணைந்து தயாரித்துள்ளனர். சில நாட்களுக்கு முன் இப்படத்தில் இடம்பெறும் ‘ஓலே ஓலே’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இதில் ரவி தேஜா ஒரு நேர்மையான ரயில்வே போலீஸ் அதிகாரியாகவும் ஸ்ரீலீலா ஒரு அப்பாவியான கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். ரசிகர்கள் எதிர்பார்த்தபடி, ரவி தேஜா நகைச்சுவை, காதல், ஆக்‌ஷன் காட்சிகளில் கலக்கி இருப்பதாக தெரிகிறது. விரைவில் இதன் டிரெய்லர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவி தேஜாவும் ஸ்ரீலீலாவும் ‘மாஸ் ஜாதரா’வின் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர தயாராகி வருகின்றனர். இப்படம் வருகிற 27ம் தேதி வெளியாகிறது.