மேடை நாடகத்தை திரைப்படமாக இயக்கிய நடிகர்
சென்னை: ‘கனகவள்ளி’ என்ற மேடை நாடகத்தை ஜெயராவ் சேவூரி கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசை அமைத்து திரைப்படமாக இயக்கியுள்ளார். இவர், கூத்துப்பட்டறையில் பசுபதி, கலைராணிஆகியோருடன் இணைந்து நடிப்பு பயிற்சி பெற்றவர். ஸ்ரீகாந்த், அதர்வா, ஆதி, முனீஷ்காந்த், வினோத் சாகர் ஆகியோர், இவரது தியேட்டர் லேப் நடிப்பு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள். தவிர ‘கடல்’, ‘அவள் பெயர் தமிழரசி’, ‘மெட்ராஸ்’, ‘ஜெய் பீம்’ போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். ருவா புரமோட்டர்ஸ் சார்பில் விக்னேஷ், வேலுமணி தயாரித்துள்ளனர்.
'
கனகவள்ளியாக சுவேட்சா சக்ரவர்த்தி நடித்துள்ளார். மற்றும் அருணாசலம், விமல் ராஜ், ஜே.எஸ்.நாராயணா, கிருஷ்ணவேணி, ஸ்ரீதரன், ராகேஷ், ஸ்ரீஹரி, யுவன் சங்கர், ராஜ்குமார், நித்தின், ஜெய் பிரகாஷ், மாறன், பல்லவி, சவுந்தர்யா, விஷால் ராஜ், சவுரவ், ஜெகதீஷ், சீனிவாசன் நடித்துள்ளனர். பிரதீப் ஒளிப்பதிவு செய்துள்ளார்.