மன அழுத்தத்தை தீர்த்து வைக்கும் எனது குழந்தைகள்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
சென்னை: சமீபத்தில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியதாவது: எனக்கு ஆராதனா என்ற மகள் மற்றும் குகன் தாஸ், பவன் தாஸ் ஆகிய மகன்கள் இருக்கின்றனர். நேரம் கிடைக்கும்போது அவர்களுடன் விளையாடி மகிழ்வேன். என் மனைவி ஆர்த்தி குழந்தைகளை முழுநேரமும் கவனித்து வருவதால், அவருக்குத்தான் உண்மையான வலி தெரியும். நான் ஒரு கண்டிப்பான தந்தை கிடையாது. இந்நிகழ்ச்சிக்கு ஆராதனாவும் வந்துள்ளார். இங்கு நிறைய பெண்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருந்து இன்ஸ்பயராகத்தான் என் மகளை அழைத்து வந்தேன். என் முதல் மகனுக்கு 4 வயது. அடுத்த மகனுக்கு ஒரு வயது. இந்திய மக்கள் தொகைக்கு நான் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறேன். படப்பிடிப்பில் தீவிர மன அழுத்தம் ஏற்பட்டு வீட்டுக்கு செல்லும்போது, எனது குழந்தைகள் என் அழுத்தத்தை குறைத்து மகிழ்விப்பார்கள். சில சமயம் மாதக் கணக்கில் படப்பிடிப்பு நடைபெறும். திடீரென ஒரு மாதம் படப்பிடிப்பு இருக்காது. அந்த விடுமுறையில் குடும்பத்துக்காக நேரம் ஒதுக்கிவிடுவேன்.