தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

புஷ்பா படத்தால் கெட்டுப்போன மாணவர்கள்: கல்வி ஆணையம் முன் ஆசிரியை பரபரப்பு புகார்

ஐதராபாத்: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்து பெரிய ஹிட்டான படம் ‘புஷ்பா 2’. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ₹1,700 கோடி வசூலித்து இருந்தது. இப்படத்தை டீச்சர் ஒருவர் கடுமையாக சாடி இருக்கிறார். ஐதராபாத் அருகே யூசுஃப்குடாவில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றுபவர் ேதவியம்மாள். புஷ்பா 2 படத்தை விமர்சித்து...

ஐதராபாத்: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்து பெரிய ஹிட்டான படம் ‘புஷ்பா 2’. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ₹1,700 கோடி வசூலித்து இருந்தது. இப்படத்தை டீச்சர் ஒருவர் கடுமையாக சாடி இருக்கிறார். ஐதராபாத் அருகே யூசுஃப்குடாவில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றுபவர் ேதவியம்மாள். புஷ்பா 2 படத்தை விமர்சித்து அவர் பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. புஷ்பா மாதிரி படங்களினாலும், சோஷியல் மீடியாவினாலும் பசங்க கெட்ட வார்த்தை பேசுகிறார்கள் என தேசிய கல்வி ஆணையம் முன் அந்த டீச்சர் பேசி இருக்கிறார்.

சமீபத்தில் தேசிய கல்வி ஆணையத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அந்த ஆசிரியை பேசியது: சினிமா பார்த்து எனது பள்ளி மாணவர்கள் கெடுகிறார்கள். இந்த பிரச்சனைய பற்றி பேச பெற்றோர்களை அழைக்கும்போது கூட அவர்கள் பசங்கள கவனிக்கிற மாதிரி தெரியவில்லை. எங்களால் அவர்களை தண்டிக்க கூட முடியாது. இன்றைய மாணவர்கள், நல்லதற்காக ஆசிரியர்கள் தண்டித்தாலும் தற்கொலை வரை போகும் நிலை இருக்கிறது. இதுக்கெல்லாம் நான் சோஷியல் மீடியாவைத்தான் குறை சொல்வேன்.

எனது பள்ளியில் பாதி பசங்க புஷ்பா படத்தால் கெட்டுப் போய்விட்டார்கள். பசங்கள கெடுக்கும் என தெரிந்தும் அந்த படத்துக்கு எப்படி சர்டிபிகேட் கொடுத்தார்கள்? மாணவர்கள் நடந்துகொள்ளும் விதத்தை பார்த்தால், ஒரு குருவாக நான் தோற்றுவிட்டதாக தோன்றுகிறது. மாணவர்கள் கண்ட ஹேர் ஸ்டைலில் வருகிறார்கள். அசிங்கமாக பேசுகிறார்கள். இவ்வாறு வேதனையுடன் அவர் பேசியுள்ளார். ஆசிரியையின் இந்த பேச்சு வீடியோ பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.