தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

சூர்யா, நஸ்ரியா படப்பிடிப்பு தொடங்கியது

சென்னை: ழகரம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜோதிகா தயாரிக்க, ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா நடிக்கும் படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. தற்காலிகமாக ‘சூர்யா 47’ என்று பெயரிடப்பட்டுள்ளது. முக்கிய வேடங்களில் நஸ்லென் கே.கபூர், ஆனந்தராஜ், ஜான் விஜய் நடிக்கின்றனர். வினீத் உண்ணி பாலோட் ஒளிப்பதிவு செய்ய, சுஷின் ஷியாம் இசை அமைக்கிறார். அஜ்மல் சாபு எடிட்டிங் செய்ய, அஸ்வினி காலே அரங்கம் அமைக்கிறார். சேத்தன் டிசௌசா சண்டைப் பயிற்சி அளிக்கிறார். தொடக்க விழாவில் சூர்யா, நஸ்ரியா, கார்த்தி, ஜோதிகா, நஸ்லென் கே.கபூர், ஆனந்தராஜ், சுஷின் ஷியாம், 2டி எண்டர்டெயின்மெண்ட் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு கலந்துகொண்டனர். இதையடுத்து படப்பிடிப்பு தொடங்கியது.