10 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’
வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்ய, மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். தேவி பிரசாத் இசையில் விவேகா, மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகின்றனர். சரித்திரக்கதை கொண்ட இதை ஸ்டுடியோ கிரீன், யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றன. கோவா மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இன்னும் 50 சதவிகித படப் பிடிப்பு நடைபெற வேண்டியிருக்கிறது. இயக்குனர் சிவா கூறுகையில், ‘எனது இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்துக்கு ’கங்குவா’ என்று பெயர் சூட்டியிருக்கிறோம். திரையில் நெருப்பின் வீரமும், வலிமையும் கொண்ட ஹீரோவாக சூர்யா இருப்பார். இன்னும் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது.முழு படப்பிடிப்பும் முடிந்த பிறகு வெளியீட்டு தேதி பற்றி அறிவிப்போம்’ என்றார்.