50வது பிறந்த நாளில் சூர்யாவின் கருப்பு டீசர் வெளியானது
அதில் படத் தலைப்பிற்கேற்ப கருப்பு வேட்டி, கருப்பு நிற சட்டையுடன் சுருட்டு பிடித்துக் கொண்டே சூர்யா நடந்து வருகிறார். அவருக்கு இரு பக்கமும் கருப்பு சாமி வேடம் போட்டவர்கள் கையில் பெரிய அரிவாளுடன் நிற்கின்றனர். போஸ்டரை தொடர்ந்து படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. நேற்று சூர்யாவின் 50வது பிறந்தநாள் என்பதால் அதை முன்னிட்டு வெளியாகியுள்ளது. டீசரில், முதலில் கருப்பு சாமியை அறிமுகப்படுத்துகின்றனர். பின்பு அதே போல் சூர்யா இருப்பது போல் காட்டுகின்றனர். அதே சமயம் வக்கீலாக சூர்யா வருகிறார். பல்வேறு ஆக்ஷன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.