தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

மகளின் மெசேஜை படித்து கதறி அழுத சூர்யா; உருக்கமான தகவல்

சென்னை: சமீபத்தில் தனது மகளை நினைத்து தேம்பி தேம்பி கதறி அழுததாக சூர்யா தெரிவித்துள்ளார். சூர்யா, ஜோதிகா தம்பதிக்கு மகள் தியா, மகன் தேவ் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் சூர்யா பேசியிருக்கிறார். தன்னுடைய மகள் தியா விரைவில் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல உள்ளதால், சமீபகாலமாக ‘சித்தா’ படத்தில் இடம்பெற்ற...

சென்னை: சமீபத்தில் தனது மகளை நினைத்து தேம்பி தேம்பி கதறி அழுததாக சூர்யா தெரிவித்துள்ளார். சூர்யா, ஜோதிகா தம்பதிக்கு மகள் தியா, மகன் தேவ் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் சூர்யா பேசியிருக்கிறார். தன்னுடைய மகள் தியா விரைவில் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல உள்ளதால், சமீபகாலமாக ‘சித்தா’ படத்தில் இடம்பெற்ற ‘என் பார்வை உன்னோடு’ பாடலை அடிக்கடி கேட்கிறேன் என கூறி சூர்யா, அந்த சம்பவத்தையும் நினைவுகூர்ந்தார்.

அதன்படி ‘ரெட்ரோ’ படப்பிடிப்பின்போது ஒரு நாள் நள்ளிரவு 3 மணியளவில் அந்த பாடலை கேட்டுக் கொண்டிருந்தபோது, தியாவிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்ததாம். அதில் அமெரிக்காவில் சென்று படிக்க அழைப்பு கடிதம் வந்துவிட்டதாக தியா தெரிவித்திருக்கிறார். மகளை நினைத்து பாடல் கேட்டுக்கொண்டிருக்கும்போது மகளிடம் இருந்து திடீரென வந்த அந்த மெசேஜால் எமோஷனலாகி நீண்ட நேரம் தேம்பி தேம்பி அழுதுகொண்டிருந்ததாக சூர்யா கூறினார். பாடல்கள் நம் வாழ்க்கையுடன் நினைவுகளாக நீடிக்ககூடியது என நெகிழ்ச்சியுடன் சூர்யா தெரிவித்தார்.