தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

வாளை சுழற்றிய பவன் கல்யாண் உயிர்தப்பிய பவுன்சர்: பட விழாவில் பரபரப்பு

ஐதராபாத்: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நடிப்பில் சுஜீத் இயக்கத்தில் உருவாகியுள்ள தெலுங்கு படம் ‘ஓஜி’. டிவிவி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்தில் இம்ரான் ஹாஷ்மி, பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ் நடித்துள்ளனர். பட ரிலீஸை முன்னிட்டு ஹைதராபாத்தில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேடைக்கு படத்தில் இருக்கும் கதாபாத்திரம் போலவே உடை அணிந்து கொண்டு கையில் வாளுடன் எண்ட்ரி கொடுத்தார் பவன் கல்யாண். அப்போது அந்த வாளை அவர் சுழற்றிய போது அவரது பின்புறம் நின்றுகொண்டிருந்த பாதுகாவலர் ஒருவர் மீது வெட்டப் பார்த்தது. அவர் உடனே குனிந்ததால் நூலிழையில் உயிர் தப்பினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிறகு பேசிய பவன் கல்யாண், ‘‘ஒரு துணை முதல்வர் இது போன்ற வாளுடன் நடப்பதை யோசித்து பாத்திருக்குறீர்களா, ஆனால் என்னால் முடியும், ஏனென்றால் இது என் படம் என்பதால்’’ என்றார். அப்போது மழை கடுமையாக பெய்தது. கொட்டும் மழையிலும் அவரது ரசிகர்கள் அமர்ந்து அவர் பேசியதை கேட்டனர். இதனிடையே பவன் கல்யாண் சுற்றி இருப்பவர்களை பார்க்காமல் வாளை சுழற்றிய செயல் பலரது கண்டனத்தை உருவாக்கியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.