சாந்தாராமின் 2வது மனைவியாக தமன்னா
இந்திய திரையுலகின் முன்னோடி இயக்குனர்களில் ஒருவர், மறைந்த வி.சாந்தாராம். கடந்த 1940 மற்றும் 1950களில் இந்தி மற்றும் மராத்தி படங்களை எழுதி இயக்கியுள்ள அவருக்கு ‘பர்சாயின்’, ‘ஆத்மி’, ‘சகுந்தலா’, ‘தோ ஆங்கேன் பாரஹாத்’, ‘ஜனக் ஜனக் பாயல் பாஜே’ ஆகிய படங்கள் இந்திய அளவில் பெரும் புகழை கொடுத்தன. தற்போது அவரது வாழ்க்கை சம்பவங்களை மையப்படுத்தி ‘வி சாந்தாராம்’ என்ற பெயரில் பயோபிக் உருவாகிறது. சாந்தாராம் வேடத்தில் சித்தாந்த் சதுர்வேதி நடிக்கிறார். சாந்தாராமின் 2வது மனைவியும், நடிகையுமான ஜெயயாக தமன்னா நடிக்கிறார்.
அவருடைய பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. அபிஜித் சிரிஷ் தேஷ்பாண்டே இயக்குகிறார். மவுனப்பட காலத்தில் இருந்து இந்தியாவில் பிரபல இயக்குனராக இருந்த வி.சாந்தாராமின் திரையுலக அனுபவத்தை படம் சொல்கிறது. அவரை பற்றி இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில் படம் உருவாகிறது.
