தமிழ் பட ரீமேக்கில் அபிஷேக் பச்சன் ஏன்? இயக்குனர் மதுமிதா பதில்
சென்னை: தமிழில் ‘வல்லமை தாராயோ’, ‘கொல கொலயா முந்திரிக்கா’, ‘கே.டி’ உள்பட பல படங்களை இயக்கியவர் மதுமிதா. இவர் முதல்முறையாக பாலிவுட்டில் தடம் பதித்துள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காளிதார் லாபத்தா’ இந்தி படம் ஓடிடியில் நேற்று முன்தினம் வெளியானது. இது குறித்து மதுமிதா கூறியது: தமிழில் நான் இயக்கிய ‘கே.டி’ படத்துக்கு நல்ல வரவேற்பு...
அந்த தீமை நான் இந்திக்காக எடுத்துக்கொண்டேன். தலைக்கூத்தல் என்பதால் 70 வயது முதியவரை அதில் நடிக்க வைத்தேன். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட 50 வயதுக்காரரை ஹீரோவாக தேர்வு செய்தேன். முதியவர் கேரக்டர் என்பதால் பலரும் அமிதாப் பச்சன் சாரை தேர்வு செய்ய சொன்னார்கள். ஆனால் 50 வயதுடையவர் என்பதால் அவரது மகன் அபிஷேக் பச்சன் இந்த வேடத்துக்கு பொருத்தமாக இருப்பார் எனத் தோன்றியது. அப்படித்தான் அவர் படத்தில் வந்தார். படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இப்படத்தை பார்க்கலாம். இவ்வாறு மதுமிதா கூறினார்.