தமிழ் குல தெய்வங்கள் பற்றி பேசும் ஆட்டி
சென்னை: சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்ற படம் ‘பரமசிவன் பாத்திமா’. படத்தின் இயக்குநர் இசக்கி கார்வண்ணன், அதில் கதாநாயகனுக்கு இணையான ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். தற்போது ‘ஆட்டி’ என்கிற படத்தில் கதையின் நாயகனாக ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘மேதகு’ படத்தை இயக்கிய இயக்குநர் தி.கிட்டுவின் இயக்கத்தில் இந்த படம்...
‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா கதாநாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். எங்கள் குலத்தில் பெண்களே முதலானவர்கள் என்கிற கருத்தை மையப்படுத்திய கதையாக இது உருவாகியுள்ளது. குறிப்பாக வரலாற்று உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழின குல தெய்வங்கள் பற்றி விரிவாக இந்த படத்தில் பேசப்பட்டிருக்கிறது.