கிரைம் திரில்லர் கதையில் தன்யா
சென்னை: ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபாகரன் தயாரித்து இயக்கியுள்ள கிரைம் திரில்லர் படம், ‘றெக்கை முளைத்தேன்’. இது வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது. ‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’, ‘கொம்புவச்ச சிங்கம்டா’ ஆகிய திரைப்படங்கள் மற்றும் ‘செங்களம்’ என்ற வெப்தொடருக்கு பிறகு எஸ்.ஆர்.பிரபாகரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் முதன்மை வேடத்தில் தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்.
முக்கியமான வேடங்களில் பிரபா, குருதேவ், நித்திஷா, மெர்லின், ஜெய்பிரகாஷ், ‘ஆடுகளம்’ நரேன், கஜராஜ், ஸ்ரீரஞ்சனி, மீரா கிருஷ்ணன் நடித்துள்ளனர். இப்படம் குறித்து எஸ்.ஆர்.பிரபாகரன் கூறுகையில், ‘கல்லூரியில் சேர்ந்தவுடன் புதிய சிறகுகள் முளைத்ததாக உணரும் மாணவர்கள் ஒருபுறம், அதிர வைக்கும் குற்றத்தை விசாரிக்கும் காவல் அதிகாரி தன்யா ரவிச்சந்திரன் மறுபுறம் என்று, தொடக்கம் முதல் இறுதிவரை பரபரப்பாக படம் நகரும். தரண் குமார் பின்னணி இசை அமைக்க, கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களுக்கான இசையை தீசன் அமைத்துள்ளார்’ என்றார்.