தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

டீக்கடை தொழிலாளியின் மகன் ஹீரோவாக அறிமுகம்

  சென்னை: குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக அறிமுகமாகும் படம், ‘குமாரசம்பவம்’. நடிகர் பாலாஜி வேணுகோபால் பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார். பாயல் ராதாகிருஷ்ணா, ஜி.எம்.குமார், குமரவேல், பாலசரவணன், வினோத் சாகர், லிவிங்ஸ்டன், சிவா அரவிந்த், வினோத் முன்னா, தாரிணி, கவிதா நடித்துள்ளனர். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, அச்சு ராஜாமணி இசை அமைத்துள்ளார். வீனஸ் இன்ஃபோடெயின்மெண்ட்...

 

சென்னை: குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக அறிமுகமாகும் படம், ‘குமாரசம்பவம்’. நடிகர் பாலாஜி வேணுகோபால் பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார். பாயல் ராதாகிருஷ்ணா, ஜி.எம்.குமார், குமரவேல், பாலசரவணன், வினோத் சாகர், லிவிங்ஸ்டன், சிவா அரவிந்த், வினோத் முன்னா, தாரிணி, கவிதா நடித்துள்ளனர். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, அச்சு ராஜாமணி இசை அமைத்துள்ளார். வீனஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சார்பில் கே.ஜி.கணேஷ் தயாரித்துள்ளார். வரும் 12ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பாலாஜி வேணுகோபால் பேசியதாவது:

‘லக்கி மேன்’ படத்துக்கு பிறகு ‘குமாரசம்பவம்’ படத்தை இயக்கியுள்ளேன். குமரனுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள்தான் ‘குமாரசம்பவம்’. இதிலுள்ள எல்லா பாடல்களையும் பாரதியார், கண்ணதாசன், வாலி, வைரமுத்து, நா.முத்துக்குமார், அசல் கோளாறு, பால் டப்பா ஆகியோருக்கு சமர்ப்பணம் செய்கிறேன்’ என்றார். குமரன் தங்கராஜன் பேசுகையில், ‘கடந்த 17 ஆண்டுகளாக சினிமாவில் நான் ஹீரோவாக வேண்டும் என்று கனவு கண்டேன். அதை தயாரிப்பாளர் கணேஷ் நிஜமாக்கியுள்ளார். எனது தந்தை டீக்கடையில் வேலை பார்த்தவர். அவருக்கு நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. அவரது கனவை நனவாக்க முயற்சி செய்தேன். எங்கெங்கோ தேடி அலைந்து, கடைசியாக ‘குமாரசம்பவம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறேன்’ என்றார்.