தெலுங்கில் ரீமேக் ஆகிறது கருடன்
சென்னை: தமிழில் ஆர்.எஸ்.துரை.செந்தில்குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்து வெளியான படம், ‘கருடன்’. முக்கிய வேடங்களில் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா நாயர், ஆர்.வி.உதயகுமார் நடித்திருந்தனர். லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கவனிக்கப்பட்டது. தற்போது இப்படத்தின் தெலுங்கு ரீமேக் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் நடந்து வருகிறது. இதில் பெல்லம்கொண்டா...
சென்னை: தமிழில் ஆர்.எஸ்.துரை.செந்தில்குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்து வெளியான படம், ‘கருடன்’. முக்கிய வேடங்களில் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா நாயர், ஆர்.வி.உதயகுமார் நடித்திருந்தனர். லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கவனிக்கப்பட்டது.
தற்போது இப்படத்தின் தெலுங்கு ரீமேக் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் நடந்து வருகிறது. இதில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், மனோஜ் மன்ச்சு, நரா ரோஹித் உள்பட பலர் நடிக்கின்றனர். ஹீரோயின்களாக ‘கயல்’ ஆனந்தி, அதிதி ஷங்கர், திவ்யா பிள்ளை நடிக்கின்றனர். வரும் டிசம்பர் மாதம் முழு படப்பிடிப்பும் முடிவடைகிறது. தெலுங்கு ‘நந்தி’ படத்தை இயக்கியிருந்த விஜய் கனகமெடலா ‘கருடன்’ ரீமேக்கை இயக்க, கே.கே.ராதாகிருஷ்ணன் தயாரிக்கிறார்.