தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

தலைவன் தலைவி - திரைவிமர்சனம்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் , சரவணன், ஆர்.கே.சுரேஷ், தீபா, காளி வெங்கட், மைனா, சென்ராயன், "படம் தலைவன் தலைவி". ஆகாசவீரன் ( விஜய் சேதுபதி) பேரரசி ( நித்யா மேனன்) இருவருக்கும் நிச்சயதார்த்தம். திருமணத்திற்கு முன்பே இருவரின் சந்திப்பும் கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறுகிறது. ஆனால்...

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் , சரவணன், ஆர்.கே.சுரேஷ், தீபா, காளி வெங்கட், மைனா, சென்ராயன், "படம் தலைவன் தலைவி".

ஆகாசவீரன் ( விஜய் சேதுபதி) பேரரசி ( நித்யா மேனன்) இருவருக்கும் நிச்சயதார்த்தம். திருமணத்திற்கு முன்பே இருவரின் சந்திப்பும் கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறுகிறது. ஆனால் ஊரில் ஆகாச வீரன் குடும்பம் குறித்த நல்ல அபிப்ராயம் இல்லாததால் பேரரசியியின் குடும்பத்தார் திருமணத்தை நிறுத்துகிறார்கள். ஆனால் குடும்பத்தை எதிர்த்து இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாகத்தான் வாழ்கிறார்கள். ஆனால் நாளுக்கு நாள் குடும்பத்தார் தலையிட்டால் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கிறது. இருவருக்கும் இடையே மோதல் ஏராளமாக நடக்கிறது. முடிவு என்ன என்பது கிளைமாக்ஸ்.

விஜய் சேதுபதி கிராமத்து கெட்டப்பில் மாஸ் காட்டுகிறார். நித்யா மேனனின் நுட்பமான நடிப்பு, குறிப்பாக அவரது அழுகைக் காட்சிகள், உணர்ச்சிகளை தீவிரமாக பதிவு செய்கின்றன. தீபா, ஆர். கே. சுரேஷ், யோகி பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் தங்களுக்கான இடங்களில் சரியாக செயல்பட்டிருக்கிறார்கள்.

முதல் பாதியில் சண்டை காட்சிகள் அதிகம்; ஆனால் இரண்டாம் பாதியில் குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, உணர்ச்சி என கதை ஓட்டம் சீராகிறது. சுகுமாரின் ஒளிப்பதிவில் மதுரையின் அழகு முழுமையாக பளிச்சிடுகிறது. பரோட்டா, யானை மலை, உடன் சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை, பொட்டல முட்டாய் பாடல் , என அனைத்தும் ரசிக்க வைக்கிறது.

மொத்ததில், சமாதானமாக பேசினால் பிரச்சனைகள் தீரும் என்பதை இன்றைய தம்பதிகளுக்கு நினைவூட்டும் எளிமையான குடும்பவியல் வகுப்பு இந்த " தலைவன் தலைவி" .