ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள்
சென்னை: நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிட்டா லிவிங்ஸ்டன் கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தின் படத்துவக்க விழா சென்னையில் நடைபெற்றது,
இப்படத்தைப் பற்றி இயக்குநர் கே.எஸ். கிஷன் கூறியது:
இது ஒரு ஹாரர் திரில்லர் படம், இதில் கதாநாயகியாக ஜோவிட்டாவும் முக்கிய கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால், அயலி புகழ் மதன், ஆதர்ஷ், மற்றும் லிவிங்ஸ்டன் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு இசை விக்னேஷ் ராஜா. ஒளிப்பதிவு சங்கீத் மணிகோபால். இப்படத்தினை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி லோகேஸ்வரன், பயோவன் கிரியேஷனிசம் எனும் பேனரில் தயாரிக்கிறார்.
