சென்னை: ஆறுமுகம் மாதப்பன் தனது எம். எல். புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் முதல் படமாக ‘வசூல் மன்னன்’ படத்தை தயாரிக்கிறார். கன்னக்கோல் படத்தை எழுதி இயக்கிய வேல் குமரேசன் எழுதி இயக்குகிறார். இப்படத்தைப் பற்றி வேல் குமரேசன் கூறும்போது, ஒருவன் தன் வாழ்நாளில் எதை வேண்டுமானாலும் இழக்கலாம், தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடவே கூடாது என்பதை...
சென்னை: ஆறுமுகம் மாதப்பன் தனது எம். எல். புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் முதல் படமாக ‘வசூல் மன்னன்’ படத்தை தயாரிக்கிறார். கன்னக்கோல் படத்தை எழுதி இயக்கிய வேல் குமரேசன் எழுதி இயக்குகிறார். இப்படத்தைப் பற்றி வேல் குமரேசன் கூறும்போது, ஒருவன் தன் வாழ்நாளில் எதை வேண்டுமானாலும் இழக்கலாம், தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடவே கூடாது என்பதை இப்படத்தின் மையக் கருவாக வைத்து, அதை நகைச்சுவையுடன் உருவாக்கி உள்ளதாகக் குறிப்பிட்டார். ஸ்ரீதேவா கதையின் நாயகனாக, நிவேதா அவருக்கு ஜோடியாக வருகிறார். வேல ராமமூர்த்தி, இமான் அண்ணாச்சி , சரவண சுப்பையா, குட்டிப்புலி சரவண சக்தி, ரிந்து ரவி நடித்துள்ளனர். பரணி இசையமைத்து, ஒரு பாடலையும் எழுதி உள்ளார்.