நடிகைக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.14 லட்சம்
அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி, பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருபவர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி (49). கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் படுதோல்வி அடைந்த அவர், தற்போது ஏக்தா கபூரின் ‘கியுங்கி சாஸ் பி கபி பஹு தி’ என்ற தொடரின் 2வது சீசனில் நடித்து வருகிறார். முதல் சீசன் 2000ல் ஒளிபரப்பானது. இதில் ஸ்மிருதி இரானி நடித்த கேரக்டர் பிரபலமானது. தற்போது 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த சீரியலின் 2ம் பாகம் தொடங்கியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டி.வியில் ஸ்மிருதி இரானி தோன்றுகிறார்.
இந்த சீரியலின் முதல் சீசனில் நடித்த அனுபவம் குறித்து அளித்த பேட்டியில், ‘ஒப்பந்தப்படி எனக்கு ஒருநாளைக்கு 1,300 ரூபாய் சம்பளம் கொடுப்பார்கள். அப்போது நான் தூய்மை பணியாளராக இருந்தேன். அங்கு எனக்கு 1,800 ரூபாய் மாத சம்பளம் கிடைத்தது. எனவே, ஒருநாளைக்கு 1,300 ரூபாய் வாங்குவது என்பது நல்ல விஷயமாக இருந்தது’ என்றார். இந்த சீரியலின் 2வது பாகம் 150 எபிசோடுகள் இருக்கிறது. ஒரு எபிசோடில் நடிக்க ஸ்மிருதி இரானிக்கு 14 லட்ச ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுகிறது.