இங்கிலாந்து நடிகையின் ‘இன்ப்ளூயன்சர்’
எட்டெர்னல் ஐகான் பிலிம்ஸ், நியூ பிச் ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஹரிசங்கர் ஜனார்த்தனம், விதுசன் ஆண்டனி தயாரித்துள்ள படம், ‘இன்ப்ளூயன்சர்’. ஒளிப்பதிவாளர் ஜி.பி.கிருஷ்ணாவிடம் உதவியாளராகவும், இயக்குனர் மிஷ்கின் படங்களில் ஸ்டில் போட்டோகிராபராகவும் ஹரிசங்கர் ஜனார்த்தனம் பணியாற்றியுள்ளார். ராபின் ஏ டவுன் சென்ட் இணை தயாரிப்பு செய்துள்ளார். இங்கிலாந்து ஃப்ளோரன்ஸ் சிம்ப்சன் ஹீரோயினாகவும், மால்டா டேன் ஹாலண்ட் ஹீரோவாகவும் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் இலங்கையை சேர்ந்த துளிகா மரப்பனா, பிரியங்கா அமர்சிங், வனிதா சேனாதிராஜா, தேவ அலோசியஸ் நடித்துள்ளனர்.
சிவசாந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய, வி.எஸ்.சிந்து அரங்கம் அமைத்துள்ளார். சுஜித் ஜெயகுமார் எடிட்டிங் செய்ய, நீரோ கில்பர்ட் இயக்கியுள்ளார். அதிக பார்வையாளர்களை ஈர்க்க, இலங்கையின் பழைய திகில் கதைகளை ஆய்வு செய்ய இளம் தம்பதி பயணிக்கின்றனர். திடீரென்று காட்டுக்குள் சிக்கி தவிக்கும் அவர்களை உள்ளூர் குடும்பத்தினர் மீட்கின்றனர். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. படம் விரைவில் திரைக்கு வருகிறது.